விளையாட்டு

உலக துப்பாக்கிச்சுடுதல்: இந்திய வீரர் அர்ஜுனுக்கு வெள்ளி

செய்திப்பிரிவு

லிமா (பெரு): ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பபுதா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பெரு நாட்டின் லிமா நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அர்ஜுன் பபுதா 252.3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் அவருக்கு வெள்ளி கிட்டியது. இதே பிரிவில் சீன வீரர் ஷெங் லிஹாவோ முதலிடமும், ஹங்கேரி வீரர் இஷ்த்வான் பெனி 3-வது இடமும் பிடித்தனர்.

SCROLL FOR NEXT