விளையாட்டு

உலக ஜூனியர் தடகளப் போட்டி: தங்கம் வென்று ஹிமா தாஸ் வரலாற்று சாதனை

செய்திப்பிரிவு

இந்தியாவின் தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

இதன் மூலம் உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை ஹிமா தாஸுக்கு கிடைத்துள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமாவின் தந்தை ஒரு விவசாயி ஆவார்.

பின்லாந்தில் உலக ஜூனியர் தடகளப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயப் பிரிவின் இறுதிப் போட்டியில் 18 வயதான இந்தியாவின் ஹிமா தாஸ் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

ஹிமாவுக்கு முன்னதாக உலக ஜூனியர் தடகளப் பிரிவில் சீமா புனியா, நவ்ஜித் கர் திலோன், வட்டு தூக்கி எறிதலில் வெண்கலப் பதக்கமும், ஈட்டி ஏறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கமும் வென்றிருந்தனர். 

தங்கப் பதக்கம் வென்ற ஹிமா தாஸுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT