விளையாட்டு

முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் அடில் ரஷீத், மொயின் அலி, ஜேமி போர்ட்டர்

செய்திப்பிரிவு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அடில் ரஷீத், மொயின் அலி, ஜேமி போர்ட்டர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 1-ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கு 13 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2016-க்குப் பிறகு அடில் ரஷீத் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார், கடைசியாக அடில் ரஷீத் ஆடியதும் இந்தியாவுக்கு எதிராகவே.

இங்கிலாந்து அணிக்குழு தலைவர் எட் ஸ்மித், குறைந்த ஓவர் கிரிக்கெட் பார்மை வைத்து அடில் ரஷீத்தைத் தேர்வு செய்துள்ளார், அதே அடிப்படையில் மொயின் அலி தேர்வைக் கூற முடியாது, ஏனெனில் 2014 தொடரில் இந்தியாவுக்கு எதிராக மொயீன் அலி 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி விவரம்:

ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ (வி.கீ), பிராட், பட்லர், அலிஸ்டர் குக், சாம் கரன், கீட்டன் ஜெனிங்ஸ், டேவிட் மலான், ஜேமி போர்ட்டர், அடில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ்.

SCROLL FOR NEXT