மும்பை: காயத்தில் இருந்து முழுமையாக மீண்டுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, விரைவில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பும்ரா, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் போது முதுகு பகுதியில் காயம் அடைந்தார். அதன் பின்னர் அவர், எந்தவிதமான கிரிக்கெட் போட்களிலும் பங்கேற்கவில்லை. காயத்துக்காக பெங்களூருவில் உள்ள பிசிசிஐ திறன்மிகு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பும்ராவுக்கு உடற்தகுதி சான்றிதழை பிசிசிஐ வழங்கி உள்ளதாகவும் இதனால் அவர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விரைவில் இணையக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணை யும் பும்ரா இரு பயிற்சி ஆட்டங்களுக்கு பின்னர் வரும் 13-ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் நடப்பு சீசனில் 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. பும்ராவின் வருகையால் அந்த அணியின் பந்து வீச்சு பலம் அதிகரிக்கக்கூடும்.