விளையாட்டு

‘நூர் அகமதுவின் கூக்ளி ஆபத்தானது’ - சொல்கிறார் குல்தீப் யாதவ்

செய்திப்பிரிவு

ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே - டெல்லி கேப்பிடல்ஸ் மோதுகின்றன. இதையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது டெல்லி அணியின் ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் கூறியதாவது:

நான் அவ்வளவு வித்தியாசமான பந்துவீச்சாளர் இல்லை. 9 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். இப்போது எல்லா அணியிலுமே இடதுகை சைனாமேன் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அது வழக்கமாகி மாறிவிட்டது. பேட்ஸ்மேன்களின் மனநிலையை அறிந்தும், என்னுடைய பலத்தை நம்பியும் செயல்படுவதுதான் என்னுடைய பாணி.

டெல்லி அணியில் இது எனக்கு 4-வது வருடம். ஒரு வீரராக நிறைய பக்குவம் அடைந்துள்ளேன். சரியான லென்ந்த்களில் வீசுவதும், பந்தை சுழலச் செய்வதுதான் என்னுடைய பலம்.

நூர் அகமது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு தெரியும். எல்லாரிடமிருந்தும் ஏதோ ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் நினைப்பார். லெக் ஸ்பின் வீசுவதைப் பற்றி அவரும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். நல்ல வேகத்தில் அவர் வீசும் கூக்ளிகள் எப் போதும் அபாயமானவை. அதுவும் சென்னையில் விளையாடும் போது ரிஸ்ட் ஸ்பின்னருக்கு எதிராக ஸ்கோர் செய்வது கடினமாகவே இருக்கும். இவ்வாறு குல்தீப் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT