விளையாட்டு

ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்திய முகமது சிராஜ் | GT vs MI

செய்திப்பிரிவு

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விக்கெட்டை கைப்பற்றினார் முகமது சிராஜ். ‘ரோஹித்தை பழி தீர்த்தார் சிராஜ்’ என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் சொல்லி உள்ளனர்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 9-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் 197 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் விரட்டியது. குஜராத் தரப்பில் முதல் ஓவரை சிராஜ் வீசினார்.

ரோஹித் மற்றும் ரிக்கல்டன் இணைந்து மும்பை இன்னிங்ஸை ஓபன் செய்திருந்தனர். முதல் ஓவரில் 2 பவுண்டரிகளை அடுத்தடுத்து வீசி இருந்தார் சிராஜ். ஓவரின் நான்காவது பந்தில் ரோஹித்தை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். பவர்பிளே ஓவர்களில் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை ரோஹித் கைப்பற்றி இருந்தார்.

அண்மையில் முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சிராஜ் தேர்வாகதது குறித்து ரோஹித் தனது கருத்தை சொல்லி இருந்தார். புதிய மற்றும் பழைய பந்துகளில் அவரது செயல்திறனை ரோஹித் விமர்சித்தார். பும்ரா அந்த தொடரில் விளையாடவில்லை. இருப்பினும் சிராஜ் தேர்வாகவில்லை. இந்த நிலையில் தான் ரோஹித் விக்கெட்டை சிராஜ் கைப்பற்றி உள்ளார்.

SCROLL FOR NEXT