விளையாட்டு

‘நானும் ரஜத் பட்டிதாரும் நண்பர்கள்’ - மனம் திறந்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்

செய்திப்பிரிவு

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஜியோ ஸ்டார் நிகழ்ச்சியில் கூறும்போது, “ஆர்சிபிக்கு எதிராக விளையாடுவதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். அந்த அணிக்கு ரஜத் பட்டிதார் புதிய கேப்டனாக உள்ளார்.

அவர்கள், ரஜத்தை கேப்டனாக அறிவித்த உடனேயே அவருக்கு மெசேஜ் அனுப்பி வாழ்த்தினேன். நாங்கள் இப்போது சிறிது காலமாக நண்பர்களாக இருக்கிறோம், நாங்கள் ஒருவருக்கொருவர் நன்கு அறிவோம்.

வெளிப்படையாக கூறவேண்டுமெனில் ஆர்சிபி வலுவான அணிகளில் ஒன்றாகும். விராட் கோலி எதிரணியில் இருக்கும்போதெல்லாம், அவர் விளையாடும் போதெல்லாம், அது எப்போதும் கவனிக்கப்படக்கூடிய ஆட்டமாகவே இருக்கும். சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி எப்போதும் சிறந்ததாக இருக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT