விளையாட்டு

ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர் பாட...கேக் வெட்டிய தோனி: வைரலாகும் வீடியோ

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணியின்  நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி இன்று (சனிக்கிழமை) தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்த நிலையில் தோனி தனது பிறந்த நாள் கேக் வெட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர் ஹாப்பி பெர்த்டே பாடலை பாட, தோனியின் மனைவி சாக்‌ஷி, மகள் ஸிவா அருகில் இருக்க தோனி தனது பிறந்த நாள் கேக்கை வெட்டுக்கிறார்.

இந்த விடியோவை குறிப்பிட்டு ட்விட்டர் , ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் #HappyBirthdayMSDhoni   ஹேஷ்டாக் ட்விட்டரில் நேற்றிலிருந்து டிரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது.

தோனியின் பிறந்த நாளுக்கு சேவாக், ரெய்னா, கைஃப் போன்ற கிரிக்கெட்  வீரர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  

SCROLL FOR NEXT