விளையாட்டு

‘இந்த நாள் இனிய நாள்’ - வெற்றியுடன் ஆர்சிபி கேப்டன் பயணத்தை தொடங்கிய பட்டிதார்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஆர்சிபி அணியின் கேப்டன் பயணத்தை வெற்றியுடன் தொடங்கி உள்ளார் ரஜத் பட்டிதார். நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது பெங்களூரு.

வெற்றிக்கு பிறகு ரஜத் பட்டிதார் கூறியதாவது, “இந்த ஆட்டத்தில் அழுத்தம் இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த நாள் இனிய நாளாக அமைந்தது. இது போல நாங்கள் வெற்றி பெறுகின்ற ஒவ்வொரு நாளும் இனிய நாள்தான். சுயாஷ் தான் எங்கள் அணியின் விக்கெட் டேக்கிங் பவுலர். அதில் நான் உறுதியாக உள்ளேன். அவர் ரன் கொடுத்தாலும் அதில் சிக்கல் எதுவும் இல்லை.

க்ருனல் பாண்டியா மற்றும் சுயாஷ் என இருவரும் ஆட்டத்தின் சூழலை அறிந்து 13-வது ஓவருக்கு பிறகு அபாரமாக பந்து வீசி இருந்தனர். அவர்கள் தங்கள் மனஉறுதியை வெளிப்படுத்தினர். விக்கெட் வீழ்த்த வேண்டுமென்ற அவர்களது மைண்ட் செட் அபாரமானது.

கோலி அணியில் இருப்பது சிறந்த விஷயம். அவர் போன்ற கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த வீரரிடம் இருந்து கற்றுக்கொள்ள எனக்கு இது நல்வாய்ப்பாக அமைந்துள்ளது” என்றார்.

இந்தப் போட்டியில் 22 பந்துகளில் எஞ்சி இருந்த நிலையில் 175 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது ஆர்சிபி. பட்டிதார், 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

SCROLL FOR NEXT