இந்திய வீரர் விராட் கோலி 300 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 300 ஒருநாள் போட்டிகள் மட்டுமல்லாமல் உலக அளவில் 100 டெஸ்ட் போட்டி கள், 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற மாபெரும் சாதனையை யும் அவர் படைத்தார்.
சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், இலங்கையின் சனத் ஜெயசூர்யா, சங்ககரா, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் போன்ற வீரர்கள் 100 டெஸ்ட் போட்டி, 300 ஒரு நாள் போட்டி என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர். ஆனால், 100 சர்வதேச டி20 போட்டிகளில் அவர்கள் யாரும் பங்கேற்றதில்லை. இந்த சாதனையைப் படைத்துள்ள ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் துபாயில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. அணியை வீழ்த்தியது. மேலும் முதல் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.