காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்தனர் தமிழக ஜோடி ஜோஷனா சின்னப்பா-தீபிகா பல்லிக்கல்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் வென்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தனர் ஜோஷனா சின்னப்பா-தீபிகா பல்லிக்கல் ஜோடி.
இங்கிலாந்து ஜோடியான ஜென்னி டன்கல்ஃப், லாரா மசாரோ ஜோடியை தமிழக ஜோடியான ஜோஷனா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல் ஜோடி 11-6, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
காமன்வெல்த்தில் இந்தியா ஸ்குவாஷில் வெல்லும் முதல் பதக்கமாகும் இது, அதுவும் தங்கமாக வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா மொத்தம் 14 தங்கம், 25 வெள்ளி, 16 வெண்கலப்பதக்கங்களுடன் இந்தியா 5ஆம் இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து மொத்தம் 145 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. 125 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 2வது இடம், 75 பதக்கங்களுடன் கனடா 3வது இடம், 49 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 4வது இடம்.