விளையாட்டு

60 மீட்டர் தடை ஓட்டம்: இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி சாதனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 60 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் நான்டெஸ் நகரில் நேற்று முன்தினம் எலைட் உள்ளரங்க தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற ஜோதி யார்ராஜி, 60 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் 8.04 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

இது இந்திய அளவில் புதிய தேசிய சாதனையாகும். நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யார்ராஜி, இதற்கு முன்பு 8.12 விநாடிகளில் ஓடி வந்து தேசிய சாதனை படைத்திருந்தார். தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

SCROLL FOR NEXT