விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: அன்ரிச் நோர்க்கியா விலகல்

செய்திப்பிரிவு

ஜோகன்னஸ்பர்க்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்க்கியா விலகியுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ் தானில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் இந்திய அணி, தனது லீக் ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடவுள்ளது. ஒருவேளை இந்திய அணி அரை இறுதி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறினால் அந்த ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, வங்கதேச அணிகளும். பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்க்கியா விலகியுள்ளார்.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அவரது விலகல் தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்டு கோட்ஸி இடம்பெறுவார் என்று தெரிகிறது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பிப்ரவரி 21-ம் தேதி கராச்சியில் நடைபெறவுள்ள தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.

SCROLL FOR NEXT