விளையாட்டு

‘ஐபிஎல்-லை குறை கூறுவது தவறு

செய்திப்பிரிவு

இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்ததற்கு ஐபிஎல்-லை காரணமாகக் கூறுவது தவறு என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளது:

இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதால்தான் டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்று கூறுவதை ஏற்கமுடியாது. முதல் டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் சதமடித்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அதிக ரன் குவித்தார். அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடியவர்தான்.

இந்திய அணி வீரர்கள் வெளிநாடுகளில் சென்று அதிக உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் சிறப்பான அனுபவம் கிடைத்துவிடும். இதற்கு முன்னோட்டமாக புஜாரா இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி போட்டிகளில் விளாயாட முடிவெடுத்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. இந்திய பந்து வீச்சாளர்களும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவில் பந்துவீசுவதில் அனுபவம் பெற வேண்டும். அனைத்து வீரர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தால்தான் அந்நிய மண்ணில் வெற்றிகளைப் பெற முடியம் என்று பீட்டர்சன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT