விளையாட்டு

‘‘25 ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தால்…’’ - அஸ்வின் நெகிழ்ச்சிப் பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் அறிவித்ததை தொடர்ந்து அவருக்கு வந்த அழைப்புகள் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “25 வருடத்துக்கு முன்பு யாராவது என்னிடம் ஸ்மார்ட் போன் இருந்து, இந்திய கிரிக்கெட் வீரராக என்னுடைய கரியரின் கடைசி நாள் கால் லாக் (call log) இப்படியிருக்கும் என சொல்லியிருந்தால் எனக்கு மாரடைப்பே வந்திருக்கும். சச்சின், கபில் தேவ் ஆகியோருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். மேலும் கபில்தேவ், சச்சின் தொலைபேசியில் அழைத்திருக்கும் ஸ்கிரீன் ஷாட்டை அஸ்வின் தனது பதிவில் இணைந்துள்ளார்.

முன்னதாக “இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அஸ்வினின் ஓய்வு முடிவு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரது இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பரவலாக ஏமாற்றத்தை தந்துள்ளது. அவரது முகத்தில் அந்த வேதனையை நான் பார்த்தேன். அவர் மகிழ்ச்சியாக இல்லை. அது வருத்தம் தான். அவருக்கு சொந்த மண்ணில் திருப்திகரமான ஃபேர்வெல் போட்டியை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆதங்கத்துடன் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT