சச்சின் மற்றும் அஸ்வின் | கோப்புப்படம் 
விளையாட்டு

‘இந்தியாவின் சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவர்’ - அஸ்வினை புகழ்ந்த சச்சின்

செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளார். கிரிக்கெட் களத்தில் அவரது சாதனைகளை முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இந்நேரத்தில் போற்றி வருகின்றனர்.

இந்த சூழலில் கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவர் என அஸ்வினை புகழ்ந்துள்ளார்.

“அஸ்வின், கிரிக்கெட் விளையாட்டில் உங்களது அணுகுமுறையை எண்ணி நான் எப்போதும் மெச்சியது உண்டு. கேரம் பால் டெலிவரியை திறம்பட வீசுவதில் தொடங்கி அணிக்கு தேவையான முக்கிய ரன்களை உங்களது பங்களிப்பை வழங்குவது வரையில் எப்போதும் வெற்றிக்கான வழியை தேடிக்கொண்டே இருப்பீர்கள்.

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய வீரர் என்ற நிலையில் இருந்து மேட்ச் வின்னர் வரை என கிரிக்கெட் களத்தில் உங்களது வளர்ச்சியை கண்டது அருமையான அனுபவம். அஞ்சாமல் நீங்கள் மேற்கொண்ட பரிசோதனை முயற்சிகளும், பரிணாமங்களும் மகத்தானது. உங்களது இரண்டாவது இன்னிங்ஸிற்கு எனது வாழ்த்துகள்” என சச்சின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT