விளையாட்டு

முதல் விக்கெட்டைக் கைப்பற்றினார் பங்கஜ் சிங்

செய்திப்பிரிவு

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான இன்று வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங் தன் முதல் டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

சற்று முன் அவர் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (77) விக்கெட்டைக் கைப்பற்றினார்.

முதல் டெஸ்ட் போட்டியில் நன்றாக வீசியும் விக்கெட் கிடைக்காத பங்கஜ் சிங் இந்த டெஸ்ட் போட்டியில் லைன் மற்றும் லெந்த்தை இழந்தார். மேலும் லெக் ஸ்டம்ப் லைனில் அதிகம் வீசினார்.

இதனால் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு பறிபோனதோடு, அதிக ரன்களையும் விட்டுக் கொடுத்தார்.

இந்த விக்கெட்டும் லெக் திசையில் வீசப்பட்ட பந்துதான். ஷாட் பிட்ச் ஆன அந்தப் பந்து ஜோ ரூட்டிற்கு லெக் திசையில் சென்றது. அவர் அதனை கிளான்ஸ் செய்ய முயன்றார்.

பந்து அவரது கிளவ்வில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டை வீழ்த்திய அவர் மகிழ்ச்சியை பெரிய புன்னகை மூலம் வெளிப்படுத்தினார்.

இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 64 ரன்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 1 ரன் எடுத்தும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து வேகமாக ரன் குவித்து வருகிறது. கடைசி 10 ஓவர்களில் 46 ரன்களை எடுத்துள்ளது.

பட்லர், ஜோ ரூட் ஜோடி 7வது விக்கெட்டுக்காக 40 ஓவர்களில் 134 ரன்களைச் சேர்த்தனர்.

SCROLL FOR NEXT