விளையாட்டு

யுவராஜ் சிங்கின் தந்தை கைது

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கை ஹரியாணா போலீஸார் கைது செய்துள்ளனர். காரை பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கியதால் அவர் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

56 வயதாகும் யோக்ராஜ் சிங், இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக விளையாடியுள்ளார். அவரது சகோதரி குடும்பத்துக்கும், பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்கும் இடையே காரை பார்க்கிங் செய்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் சமரசம் செய்ய யோக்ராஜ் சென்றுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதில் யோக்ராஜ் சிங்தான் முதலில் தாக்குதலில் ஈடுபட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT