கார்டிஃபில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளது.
இந்திய அணி விவரம்: ஷிகர் தவன், ரோகித் சர்மா, ரெய்னா, கோலி, தோனி, ரஹானே, ஜடேஜா, அஸ்வின், புவனேஷ் குமார், மொகமட் ஷமி, மோகித் சர்மா.
இங்கிலாந்து அணி விவரம்: குக், ஹேல்ஸ், இயன் பெல், ஜோ ரூட், இயன் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், ஜேம்ஸ் டிரெட்வெல், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
உமேஷ் யாதவ்வை அணியில் தேர்வு செய்யவில்லை. இதனால் இந்தியப் பந்து வீச்சில் வேகம் என்பது இருக்காது. ஜடேஜா, அஸ்வின் இருவரையும் வைத்துக் கொள்வதும் இங்கிலாந்து சூழ்நிலைக்குப் பொருந்துமா என்பதும் புரியவில்லை. மீண்டும் ஒரு சொதப்பல் அணித் தேர்வா? என்பதெல்லாம் ஆட்டம் போகப்போகவே தெரியும்.
இப்போதைக்கு 2 ஓவர்கள் முடிந்து விட்டன. இன்னும் ஒரு ரன் வரவில்லை என்பதே நிலவரம். தவன், ரோகித் களமிறங்கியுள்ளனர்.