துபாய்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்விகண்டது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றி சதவீதம் 68.06 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில், நியூஸிலாந்து அணி 6-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
62.50 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்திலும், 55.56 சதவீத வெற்றிகளுடன் இலங்கை அணி 3-வது இடத்திலும் உள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் ஆகியவை முறையே 5, 6, 7, 8, 9-வது இடங்களில் உள்ளன.