விளையாட்டு

ஆஸி.யிடம் இந்தியா தோல்வி: அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு எப்படி? @ மகளிர் டி20 WC

செய்திப்பிரிவு

ஷார்ஜா: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு எப்படி? என்பதை பார்ப்போம்.

‘குரூப் - ஏ’ பிரிவில் உள்ள இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுடன் தோல்வியும், பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்தியும் உள்ளது இந்தியா. நேற்று (அக்.13) ஷார்ஜாவில் நடைபெற்ற இந்திய அணியின் கடைசி லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணியிடம் 9 ரன்களில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

அதனால் இந்த பிரிவில் இருந்து இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஏதேனும் ஒன்று மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். அது எந்த அணி என்பது இன்று நடைபெறும் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவை பொறுத்துள்ளது. ஏற்கெனவே இலங்கை அணி வெளியேறிவிட்டது.

இதில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றால் புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதுவே பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் முதலில் பேட் செய்து 53+ ரன்களிலும், இரண்டாவதாக பேட் செய்தால் இலக்கை 9.1 ஓவர்களில் எட்ட வேண்டும். அது நடந்தால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அப்படி இல்லாமல் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT