புதுடெல்லி: ஆசிய டேபிள் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி ஜோடிக்கு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
கஜகஸ்தானின் அஸ்டானாவில் நேற்று நடைபெற்ற கால் இறுதி போட்டியில் அய்ஹிகா, சுதிர்தா ஜோடி 3-1 (10-12, 11-7, 11-9, 11-8) என்ற கணக்கில் தென் கொரியாவின் கிம் நயியோங், லீ யுன்ஹியே ஜோடிைய வீழ்த்தியது.
அரை இறுதிக்கு முன்னேறியுள்ளதன் மூலம் அய்ஹிகா, சுதிர்தா ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது. ஆடவர் பிரிவில் இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தக்கர் ஆகியோர் கால் இறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.