ராபின் உத்தப்பா 
விளையாட்டு

ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் - இந்திய அணிக்கு உத்தப்பா கேப்டன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹாங்காங்கில் நடைபெறவுள்ள ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் நவம்பர் 1 முதல் 3-ம் தேதி வரை ஹாங்காங்கின் மிஷன் ரோட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் ஓர் அணியில் 6 வீரர்கள் களமிறங்கி விளையாடுவர். இந்திய அணியில் ராபின் உத்தப்பா, கேதார் ஜாதவ், ஸ்டீவர்ட் பின்னி, மேனாஜ் திவாரி, ஷாபாஸ் நதீம், பாரத் சாப்லி, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி ஆகியோர், இடம்பெற்றுள்ளனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. நவம்பர் 1ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.

SCROLL FOR NEXT