விளையாட்டு

விசாகப்பட்டினத்துக்கு விரைவில் டெஸ்ட் அந்தஸ்து

செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம் கிரிக்கெட் மைதானத்துக்கு விரைவில் டெஸ்ட் அந்தஸ்து கிடைக்கும் என ஆந்திர கிரிக்கெட் சங்க செயலர் கோகராஜூ கங்கராஜூ நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ஆந்திர கிரிக்கெட் சங்கத்தின் வைரவிழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கோகராஜூ, “விசாகப்பட்டினம் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நடத்த அனுமதிக்குமாறு பிசிசிஐயை அணுகினோம். அதைத் தொடர்ந்து பிசிசிஐ அதிகாரிகள் மைதானத்தை பார்வையிட்டு சில மாறுதல்களை செய்யுமாறு அறிவுரை வழங்கினர். அந்த மாறுதல்கள் இந்த மாத இறுதிக்குள் செய்யப்பட்டுவிடும். எனவே அடுத்த மாதம் டெஸ்ட் அந்தஸ்து கிடைத்துவிடும்” என்றார்.

SCROLL FOR NEXT