விளையாட்டு

பாகிஸ்தான் ஒலிம்பியன்கள் கைது

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒலிம்பிக்கில் விளையாடிய முன்னாள் ஹாக்கி வீரர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் ஹமர் இப்ராஹிம், முகமது இர்ஃபான், கம்ரன் அஷ்ரப் ஆகியோர் தேசிய ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர்கள். டேனிஷ் கலீம், அஞ்ஜீம் சயீத், சோஹைல் அஷ்ரப் ஆகியோர் பாகிஸ்தானுக்காக ஒலிம்பிக்கில் ஹாக்கி விளையாடியவர்கள். இவர்களுடன் பெண் ஒருவரும் இருந்துள்ளார். இவர்கள் 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT