குவாலியர்: மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் மைதானத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த மைதானத்தில் நாளை (அக்டோபர் 6), இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இதற்கு முன்பு இங்கு 2010-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில்தான் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் முதலாவது இரட்டை சதத்தை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.