லண்டன்: நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இப்போட்டி நடைபெற்றது. மழையின் காரணமாக 39 ஓவர்கள் கொண்டதாக இந்த போட்டி மாற்றப்பட்டது.
இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் 87, டக்கெட் 63, லியாம் லிவிங்ஸ்டன் 62, ஜேமி ஸ்மித் 39 ரன்கள் குவித்தனர். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி கண்டது. மேத்யூ பாட்ஸ் 4, பிரைடன் கார்ஸ் 3, ஜோப்ரா ஆர்ச்சர் 2, ஆதில் ரஷித் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.