விளையாட்டு

420 ‘டெஸ்ட் விக்கெட்’ - கும்ப்ளே சாதனையை முறியடித்த அஸ்வின்!

செய்திப்பிரிவு

கான்பூர்: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிசந்திரன் அஸ்வின் ஆசியாவிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதன் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் 35 ஓவர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் 3 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 107 ரன்களை சேர்த்தது.

இந்தப் போட்டியில் கேப்டன் நஜ்முல் ஹுசைனை 31 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார் அஸ்வின். இந்த தொடரில் மட்டும் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஆசியாவிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் முத்தையா முரளிதரன் 612 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், 419 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே இரண்டாம் இடத்திலும் இருந்தனர். இன்றைய போட்டியின் மூலம் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து 420 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் அஸ்வின். மேலும், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உலக அளவில் 523 விக்கெட்டுகளுடன் அஸ்வின் 8-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவில் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய பவுலர்கள்:

  • முத்தையா முரளிதரன் - 620
  • ரவிசந்திரன் அஸ்வின் - 420
  • அனில் கும்ப்ளே - 419
  • ரங்கன ஹேரத் - 354
  • ஹர்பஜன் சிங் - 300
SCROLL FOR NEXT