ஐபிஎல் போட்டியின்போது அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளை பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மோர்ன் மோர்கலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் வாட்சனுக்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது மோர்கல் எதிரணி வீரர்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். ஐபிஎல் விதிகளின்படி இது தவறு. எனவே அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.