விளையாட்டு

பானை மேல் ஏறி நின்றபடி 10.22 விநாடியில் 140 அம்புகள் எய்து சிறுவன் நிதீஷ் சாதனை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை முகப்பேரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிறுவன் நிதீஷ். தாத்தா பாட்டியுடன் வசித்து வரும் 6 வயதான நிதீஷ், முகப்பேர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். வில்வித்தையில் ஆர்வம் கொண்ட நிதீஷ், அருகில் உள்ள அர்ஜுனா வில்வித்தை அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், உலக இளம் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடிக்கும் நோக்கில் விரைவாக அம்பு எய்து சாதனை படைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.

இதன்படி சென்னை முகப்பேரில் உள்ள அர்ஜுனா வில்வித்தை அகாடமியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதீஷ், பானை மேல் ஏறி நின்றபடி 10 நிமிடம் 22 விநாடிகளில் 140 அம்புகள் எய்து சாதனை படைத்தார். அவருக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT