ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்த 2 வயது சிறுவனின் கிரிக்கெட் ஆட்டத்தைக் கண்ட சச்சின் டெண்டுல்கர் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்துளார். .
ட்விட்டரில் மோஷின் என்ற நபர் தனது உடன்பிறந்தவரின் 2 வயது மகன் ஆஷிம், கிரிக்கெட் ஆடும் விளையாட்டை பதிவிட்டுருந்தார், அவர் நன்றாக விளையாடுகிறாரா? என்று கோலி, சச்சின், தோனி ஆகியோரை குறிப்பிட்டுகேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த சச்சின் அந்த வீடியோவை குறிப்பிட்டு, "நவீன காலத்தின் சிறந்த விளையாட்டு வீரர். சிறந்த தொடக்கம் ஆஷிம். தொடர்ந்து விளையாடுங்கள்..சந்தோஷமாக விளையாடுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள் எப்போதும் இருக்கு" என்று பதிவிட்டுள்ளார்.
ட்விட்டரில் இந்த சிறுவனின் கிரிக்கெட் விளையாட்டை பார்த்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.