ஷிகர் தவண் 
விளையாட்டு

லெஜண்ட்ஸ் லீக்கில் இணைந்தார் தவண்!

செய்திப்பிரிவு

சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவண், லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இணைந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை தனது ஓய்வு முடிவை அறிவித்த 38 வயதான ஷிகர் தவண், வரும் செப்டம்பர் மாதம்நடைபெற உள்ள லெஜண்ட்ஸ் லீக் டி 20 தொடரில் இணைந்துவிளையாட முடிவு செய்துள்ளதாக நேற்று அறிவித்தார். ஷிகர் தவண், இந்திய அணிக்காக 34 டெஸ்ட் போட்டி, 167 ஒருநாள் கிரிக்கெட், 68 டி 20 ஆட்டங்களில் விளையாடி கூட்டாக 12,286 ரன்கள் சேர்த்திருந்தார்.

SCROLL FOR NEXT