விளையாட்டு

ஸ்ரீஜேஷுக்கு ரூ.2 கோடி பரிசு: கேரள அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தது. இந்த அணியில் கேரளாவைச் சேர்ந்த கோல்கீப்பரான பி.ஆர்.ஸ்ரீஜேஷ் முக்கிய பங்கு வகித்திருந்தார். இந்நிலையில் கேரள அரசு சார்பில் அவருக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT