காமன்வெல்த் மகளிர் லைட்வெயிட் வலுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சகினா காட்டுன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் சகினா 88.2 கிலோ எடையைத் தூக்கியதன் மூலம் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதேபிரிவில் நைஜீரியாவின் எஸ்தர் ஒயீமா 136 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், இங்கிலாந்தின் நடாலி பிளேக் (100.2 கிலோ) வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.