இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் லிம் ப்ளங்கட்டுக்கு பதிலாக ஸ்டீவ் பின் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்குவார்.
வேகப்பந்து வீச்சாளரான ப்ளங்கட் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டும், 2-வது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டும் வீழ்த்தினார். காயம் காரணமாக 3-வது டெஸ்ட்டில் அவர் விளையாடவில்லை. 2-வது டெஸ்ட் போட்டி முடிவின் போது அவருக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. எனவே அவர் அணியில் இருந்து விலகினார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அடைந்த மோசமான தோல்விக்குப் பின் அணியில் ஸ்டீவ் பின் சேர்க்கப்படவில்லை. இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.