விளையாட்டு

ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: சஞ்சு சாம்சன் இடம்பெற்றார்

செய்திப்பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஒரேயொரு 20 ஓவர் போட்டிக்கான 17 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல். கிரிக்கெட்டில் புகழ்பெற்று தற்போது இந்தியா ஏ அணியில் கலக்கிய கேரளா விக்கெட்கீப்பர்-பேட்ஸ்மென் சஞ்சு சாம்சன் மற்றும் ரயில்வேஸ் அணிக்கு ஆடிவரும் லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் கரண் சர்மா ஆகியோர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டனர்.

அணி விவரம்:

தோனி (கேப்டன்), விராட் கோலி, ஷிகர் தவன், ரோகித் சர்மா, அஜிங்கிய ரஹானே, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஸ்டூவர்ட் பின்னி, புவனேஷ் குமார், மொகமது ஷமி, மோகித் சர்மா, அம்பாத்தி ராயுடு, உமேஷ் யாதவ், தவால் குல்கர்னி, சஞ்சு சாம்சன், கரன் சர்மா

SCROLL FOR NEXT