விளையாட்டு

“விலைமதிப்பில்லாத பிறந்தநாள் பரிசு இது” - இந்திய அணிக்கு தோனி வாழ்த்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: "விலைமதிப்பில்லாத பிறந்தநாள் பரிசை எனக்கு அளித்ததற்கு நன்றி" என்று இந்திய அணி உலகக் கோப்பை வென்றது குறித்து முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இதையடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்துள்ள வாழ்த்தில், "என் இதயத்துடிப்பு எகிறிவிட்டது. ஆனால் இந்திய வீரர்கள் நிதானமாக, தங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடி வெற்றி பெற்றுவிட்டனர். உலகக் கோப்பையை மீண்டும் தாயகம் கொண்டுவருவதற்காக உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சார்பில் நன்றி. மேலும், விலைமதிப்பில்லாத இந்த பிறந்தநாள் பரிசை எனக்கு அளித்ததற்கு நன்றி" என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடி வாழ்த்து: இந்திய அணியின் வெற்றி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நம் அணி தனது ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கு கொண்டு வருகிறது. இந்திய அணியை எண்ணி பெருமை கொள்கிறோம். இது வரலாற்றுச் சிறப்பு மிக்கது” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT