விளையாட்டு

இங்கிலாந்து சென்றும் சிஎஸ்கே மீது பாசம் குறையாத மார்க் உட்: அம்பத்தி ராயுடுவுக்காக பாடல்

செய்திப்பிரிவு

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான மார்க் உட் தொடர்ந்து பேட்டிங்கில் அசத்தி வரும் அம்பத்தி ராயுடுவுக்கும், சிஎஸ்கே அணிக்கும்  பாடல் ஒன்றை தனது நண்பர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்  தயாரிப்புக்காக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் முன்னதாகவே விடுவித்தது. சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட மார்க் உட் இங்கிலாந்து சென்று சிஎஸ்கே அணியின் ஆட்டங்களைப் பார்த்து ஆதரவளிப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சன் ரைசர்ஸ் அணியுடனான சிஎஸ்கேவின் ஆட்டத்தில்  சென்னைஅணி வெற்றி பெற சதம் அடித்து முக்கிய காரணமாக இருந்த அம்பத்தி ராயுவைப் பாராட்டியும், சென்னை அணியை நினைவுகூர்ந்தும்  மார்க் தனது நண்பர்களுடன் இணைந்து பாடிய பாடலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடிருக்கிறார்.

டு..டு..டு..டு..டு......அம்பத்தி ராயுடு என்று ஒவ்வொரு வரிகளில் முடியும் இப்பாடலை சென்னை சூப்பர் கிங்ஸ்  தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் பலரும் மார்க் உட்டைப் பாராட்டிப் பதிவிட்டு வருகிறார்கள்.

மார்க் உட் பாடிய பாடல் ... 'I just can't get enough!'

இதையும் படிங்க..மிஸ் பண்ணிடாதீங்க...

SCROLL FOR NEXT