ஜொனதன் ட்ராட் 
விளையாட்டு

இந்தியாவுடன் பகல் ஆட்டத்தில் விளையாடுவது உற்சாகம்: ஆப்கன் பயிற்சியாளர் ட்ராட் | T20 WC

செய்திப்பிரிவு

பார்படாஸ்: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் இந்தியா இன்று பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டி குறித்து ஆப்கன் அணியின் பயிற்சியாளர் ஜொனதன் ட்ராட் தெரிவித்தது குறித்து பார்ப்போம்.

“பகல் நேர ஆட்டம் எங்களுக்கு கச்சிதமாக பொருந்தும். அதனால் இந்திய அணியுடன் பகல் ஆட்டத்தில் விளையாடுவது மிகவும் உற்சாகம் அளிக்கிறது. இந்த தொடரை வெல்லும் ஃபேவரைட் அணிகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அதுவே அவர்களுக்கு நெருக்கடியை தரும் என கருதுகிறேன். இந்தப் போட்டிக்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

எங்கள் அணி வீரர்கள் ஐபிஎல் உட்பட அதிகம் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றனர். அந்த செயல்பாட்டை இப்போது ஒரு அணியாக வெளிப்படுத்தி வருகிறோம். எங்கள் அணியின் பலம் சுழற்பந்து வீச்சாளர்கள் தான். அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

ஆனால், தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஃபரூக்கி. அதனால் ஆடுகளம் சூழல் அல்லது ஸ்விங் என எதற்கு ஒத்துழைத்தாலும் எங்களால் விக்கெட் வீழ்த்த முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதோடு பெங்களூருவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டபுள் சூப்பர் ஓவர் ஆட்டம் குறித்தும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். இந்த மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் குறித்தும் அவர் சொல்லியிருந்தார். அந்தப் போட்டியில் இந்தியாவின் 212 ரன்களை ஆப்கானிஸ்தான் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டு சூப்பர் ஓவர்கள் மூலம் இந்தியா வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT