விளையாட்டு

இணையதள தேடலில் சுஷீல் குமாருக்கு முதலிடம்

செய்திப்பிரிவு

இந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷீல் குமார் ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களில் இணையதளத்தில் அதிக அளவில் தேடப்பட்டவர்கள் வரிசையில் சுஷீல் குமாருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

சுஷீல் குமாருக்கு அடுத்தபடியாக விஜேந்தர் சிங் (குத்துச்சண்டை), யோகேஷ்வர் தத் (மல்யுத்தம்), விகாஸ் கௌடா (தடகளம்), காஷ்யப் (பாட்மிண்டன்) ஆகியோர் அதிக அளவில் ரசிகர்களால் தேடப்பட்டுள்ளனர்.

அதிக அளவில் இணையதளத்தின் மூலம் தேடப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பாட்மிண்டனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இந்தப் பிரிவில் காஷ்யப் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்மிண்டனில் தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமை காஷ்யப்புக்கு கிடைத்தது. அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகளில் குத்துச்சண்டை மற்றும் மல்யுத்த போட்டிகளுக்கு முறையே 2-வது மற்றும் 3-வது இடங்கள் கிடைத்துள்ளன.

சமீபத்தில் முடிவடைந்த 20-வது காமன்வெல்த் போட்டியில் இந்தியா 15 தங்கம் உள்பட 64 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்தது.

SCROLL FOR NEXT