டி.பி.மானு 
விளையாட்டு

தங்கம் வென்றார் டி.பி.மானு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தைவான் ஓபன் தொடரில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் டி.பி.மானு 81.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற மானு தனது கடைசி முயற்சியில் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் மானு 6-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்திருந்தார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அவர், இன்னும் தகுதி பெறவில்லை. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி 85.50 மீட்டர் ஆகும்.

SCROLL FOR NEXT