விளையாட்டு

உலகின் சிறந்த வீரர்களில் நானும் ஒருவர்

செய்திப்பிரிவு

10-வது நிலையில் (பொசிஷன்) ஆடக்கூடிய உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் நானும் ஒருவர் என ஆர்செனல் கால்பந்து அணியின் ஸ்டிரைக்கர் மெசூத் ஒஸில் தெரிவித்துள்ளார்.

ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த மெசூத், கடந்த ஆண்டு ஆர்செனல் அணிக்கு தாவினார். ஆனால் கடந்த சீசனில் அவ்வப்போது மட்டுமே களமிறக்கப்பட்ட அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளானார். அதற்குப் பதிலளித்துள்ள மெசூத் மேலும் கூறியதாவது:

வலது புறத்தில் விளையாடக்கூடிய என்னை இடதுபுறத்தில் விளையாட வைப்பதால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. நான் கோலடிப்பதோடு மட்டுமின்றி, கோல் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய நபர் என்பது அணியின் பயிற்சியாளர், சகவீரர்கள், ரசிகர்கள் என ஒவ்வொருவருக்கும் தெரியும்.

மாட்ரிட் அணிக்காக நான் விளையாடியபோது வலது புறத்தில் விளையாடினேன். இடது காலால் பந்தை அடிக்கக்கூடிய நான் வலது புறத்தில் இருந்து விளையாடியதால் சிறப்பாக ஆட முடிந்தது. நான் கோலடித்ததோடு மட்டுமல்லாமல், மற்றவர்கள் கோலடிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன். ஆனால் இடது கால் பழக்கம் கொண்ட நான், இடதுபுறத்தில் இருந்து கோலடிப்பது மிகக் கடின மானது. எனினும் ரசிகர்களின் கருத்துகள் எனக்கு மிக முக்கியமானவை. அவர்கள் என் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்தி ருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்

SCROLL FOR NEXT