மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இரண்டரை நாட்களில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததையடுத்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
பிபிசி வானொலியின் டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியில் சுனில் கவாஸ்கரும் இந்திய கிரிக்கெட்டை சாடுபவர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளார்.
அதிக சம்பளம் வாங்கும் பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர், தோனிக்கு அறிவுரை வழங்கவில்லை. மான்செஸ்டர் பிட்சில் டாஸ் வென்ற பிறகு இந்தியா ஃபீல்டிங்கைத் தேர்வு செய்திருக்க வேண்டும், இது குறித்து தோனிக்கு பயிற்சியாளர் பிளெட்சர் அறிவுரை வழங்கவில்லை என்று கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: "இந்திய வீரர்கள் முதுகெலும்பற்றவர்களாக சரண் அடைந்தனர். இந்திய பேட்ஸ்மென்களின் ஆட்டத்தில் உறுதி இல்லை. இங்கிலாந்து பந்து வீச்சில் பெரிய அச்சுறுத்தல் இல்லை. அவுட் ஆனவர்கள் அனைவரும் தேவையில்லாமல்தான் அவுட் ஆனார்கள்.
தலையைத் தொங்கப் போட்டு விடுகின்றனர். அதன் பிறகு போராட்ட குணம் இல்லாமல் போய் விடுகிறது" என்று கூறியுள்ளார்.