பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸூக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 218 ரன்களைச் சேர்த்துள்ளது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆர்சிபியின் ஓபனர்களாக டு பிளெஸ்ஸிஸ் - விராட் கோலி களமிறங்கினர். முதல் 3 ஓவர்கள் வரை சீராக சென்ற ஆட்டம் அதன் பிறகு மழையால் சிறிது நேரம் தடைப்பட்டது.
ஓபனர்கள் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விராட் கோலி தேவையான நேரங்களில் சிக்சரை விளாசினார். இந்தத் தொடரில் அதிகபட்ச சிக்சர்களை விளாசியவர்கள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்தார். மொத்தம் 37 சிக்சர்களை விளாசினார்.
மிட்செல் சான்ட்னர் வீசிய 10ஆவது ஓவரில் 47 ரன்களில் கோலி அவுட்டானது ஏமாற்றம். அரைசதம் மிஸ்ஸிங். 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்த ஆர்சிபி 78 ரன்களைச் சேர்த்தது.
டு பிளெஸ்ஸிஸ் நிலைத்து ஆடி அரைசதம் கடந்தார். ஆனால் 54 ரன்களில் ரன்களில் ரன்அவுட்டாகி வெளியேறினார். அடுத்து கேமரூன் கிரீன் - ரஜத் படிதார் கைகோத்தனர். 4 சிக்சர்களை விளாசிய ரஜத் படிதார் 41 ரன்களில் விக்கெட்டானார்.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் நிலைக்காமல் 14 ரன்களில் கிளம்பினார். வந்ததும் சிக்ஸ் அடித்து மாஸ் காட்டிய மேக்ஸ்வெல் 16 ரன்களில் நடையைக் கட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 218 ரன்களை குவித்தது. கேமரூன் கிரீன் 38 ரன்களுடனும், மஹிபால் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
சிஎஸ்கேவை பொறுத்தவரை ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும் துஷார் தேஷ்பாண்டே, , மிட்செல் சாட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.