விளையாட்டு

சிஎஸ்கே போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை

செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் டி 20 தொடரில் வரும் 12-ம் தேதி சிஎஸ்கே–ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (9-ம் தேதி) காலை 10.40 மணிக்கு இணையதளம் வாயிலாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Paytm மற்றும் www.insider.in என்ற இணையதளம் வாயிலாக டிக்கெட்களை பெறலாம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சி, டி, இ கீழ் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.1,700 எனவும் ஐ, ஜே, கே மேல் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.2,500 எனவும் ஐ, ஜே, கே கீழ் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.4 ஆயிரம் எனவும் சி,டி,இ மேல் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.3,500 எனவும், கேஎம்கே டெரஸ் டிக்கெட் விலை ரூ.6 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT