மதிஷா பதிரனா 
விளையாட்டு

நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து காயம் காரணமாக பதிரனா விலகல்

செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடி வரும் மதிஷா பதிரனா காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார்.

17-வது ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியும், 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

சிஎஸ்கே அணிக்காக இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரனா விளையாடி வந்தார். இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளையும் அவர் சாய்த்திருந்தார்.

இதனிடையே காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட அவர், சிஎஸ்கே விளையாடிய கடந்த 2 ஆட்டங்களிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தசைநார் முறிவு சிகிச்சை பெறுவதற்காக அவர் இலங்கை சென்றுள்ளார்.

சிகிச்சை முடிந்தபிறகு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இவர் நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT