ஸ்மித் | கோப்புப்படம் 
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை ஆஸி. அணியில் ஸ்மித்துக்கு இடமில்லை

செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஜூன் 2-ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

இதில் கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இடம் வழங்கப்படவில்லை. கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் இடம்பெற்றுள்ளனர். 34 வயதான ஸ்மித் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 67 ஆட்டங்களில் விளையாடி 24.86 சராசரியுடன் 1,094 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதேவேளையில் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி வரும் 22 வயதான ஜேக் ஃபிரேசர் மெக்கர்க்கிற்கும் உலகக் கோப்பை அணியில் இடம் வழங்கப்படவில்லை.

அணி விவரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாயினிஸ், கேமரூன் கிரீன், மேத்யூ வேட், ஜோஷ் இங்கிலிஷ், அஷ்டன் அகர், ஆடம் ஸம்பா, பாட் கம்மின்ஸ், நேதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்.

SCROLL FOR NEXT