லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்ய லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அந்த அணியில் நிகோலஸ் பூரன் 45 ரன்களும், கே.எல். ராகுல் 39 ரன்களும், ஆயுஷ் பதோனி 29 ரன்களும் எடுத்தனர்.
ஆனால், குவிண்டன் டி காக் 10 ரன்கள், தீபக் ஹூடா 8 ரன்கள், மார்கஸ் ஸ்டாயினிஸ் 10 ரன்கள் என முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா சுனில் நரைன், வருன் சக்ரவர்த்தி, ஆண்ட்ரெ ரசல் ஆகியோரே தலா ஒரு விக்கெட் வீழ்த்தி லக்னோ அணியை கட்டுப்படுத்தினர்.
இதன்பின் 162 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு பில் சால்ட் அதிரடி துவக்கம் கொடுத்தார். அவருக்கு கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் நிதானமாக கம்பெனி கொடுக்க எளிதில் இலக்கை துரத்தி வெற்றிபெற்றது. பில் சால்ட் 89 ரன்கள், ஸ்ரேயஸ் ஐயர் 38 ரன்கள் என நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக லக்னோ பந்துவீச்சை சமாளித்தனர்.
இதனால், கொல்கத்தா அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி சார்பில் மோசின் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.