முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் 147 ரன்களைச் சேர்த்து சுருண்டது. பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.
முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ய, ஓப்பனர்களாக ஜானி பேர்ஸ்டோ - அதர்வ தைடே களமிறங்கினர்.
27 ரன்களைச் சேர்த்த இந்த பாட்னர்ஷிப்பை 4வது ஓவரில் அவேஷ் கான் பிரித்தார். அதர்வ தைடே 15 ரன்களுக்கு அவுட். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 10 ரன்களில் கிளம்பினார். ஜானி பேர்ஸ்டோ 15 ரன்களுக்கு விக்கெட்டாக, சாம் கரன் 6 ரன்களில் அவுட்டாகி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த பஞ்சாப் 53 ரன்களை மட்டுமே சேர்த்தது.
ஷசாங்க் சிங் 9 ரன்கள், ஜிதேஷ் சர்மா 29 ரன்கள் என நிலைக்காமல் கிளம்ப அஷுதோஷ் சர்மா மட்டும் அணியில் அதிகபட்ச ஸ்கோரா 31 ரன்களைச் சேர்த்தார். அவரின் 3 சிக்சர்கள் பெரும் நம்பிக்கையூட்டியது. இறுதியில் அவரும் விக்கெட்டாக 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 147 ரன்களைச் சேர்த்தது.
ராஜஸ்தான் அணி தரப்பில் அவேஷ் கான், கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட், சாஹல், குல்தீப் சென் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.