விளையாட்டு

சாய்னாவுக்கு பத்மபூஷண் ‘பாய்’ பரிந்துரை

செய்திப்பிரிவு

பத்மபூஷண் விருதுக்கு பாட் மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலின் பெயரை பரிந்துரைத்துள்ளது இந்திய பாட்மிண்டன் சங்கம் (பாய்).

ஒலிம்பிக் பாட்மிண்டனில் பதக்கம் (வெண் கலம்) வென்ற ஒரே இந்திய வீராங்கனையான சாய்னா நெவால், ஏற்கெனவே அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றைப் பெற்றுள்ள நிலையில், இப்போது அவருடைய பெயர் பத்மபூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது. பாட்மிண்டன் சங்கத்தின் பரிந்துரை மத்திய விளையாட்டு அமைச்சகத்துடன் கிடைத்தவுடன் அங்கிருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.

பிரீமியர், சூப்பர் சீரிஸ், கிராண்ட்ப்ரீ கோல்டு ஆகிய பாட்மிண்டன் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் சாய்னா என்பது குறிப் பிடத்தக்கது.

SCROLL FOR NEXT